Attur Express

Tuesday, June 21, 2016

ஜென் துறவி

No comments :

ஒரு கிராமத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த ஒரு பிரச்சனையையும் எளிதில் தீர்த்துவிடும் தன்மை உடையவர்.

ஆகவே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவரிடம் சென்று, தங்கள் பிரச்சனையை சொல்லி சரிசெய்து கொள்வர்.

அத்தகைய கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை அருகில் உள்ள சந்தைக்கு சென்று வாங்குவது வழக்கம். சந்தை என்றாலே சற்று தூரமாக, சிறு சிறு தெருக்களை தாண்டி தான் செல்ல வேண்டியிருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் "சந்தை நாள்" என்ற ஒன்று இருக்கும். இந்த நாளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். அவ்வாறு ஒரு சந்தை நாளன்று மக்கள் அந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்த நாள் மிகவும் கூட்டமாக இருந்தது. அந்த கூட்டம் சிறு தெருக்கள் வரை நின்றிருந்தது. அதிலும் மக்கள் அந்த சந்தைக்கு செல்லும் போது எப்போதும் ஒரே தெருவில் தான் செல்வார்கள். அந்த நாளன்று அந்த தெருவின் முனையில் ஒரு முரட்டுக்குதிரை இருந்தது. மக்கள் சந்தைக்கு செல்ல வேண்டுமென்றால், அந்த குதிரையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

அந்த குதிரையின் பக்கத்தில் சென்றால், குதிரையின் முரட்டுத்தனத்தை பார்த்து, அப்படியே அந்த இடத்தில் நின்று மக்கள் எவ்வாறு அந்த குதிரையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அந்த ஜென் துறவியும் அந்த சந்தைக்குச் செல்வதற்கு வந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த மக்கள், அந்த துறவியிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள்.

அந்த துறவி "அப்படியா?" என்று சொன்ன படியே, வந்த வழியாக திரும்பி சென்று, மற்றொரு தெருவின் வழியாக சந்தைக்கு சென்றார்.

ரத்தம்

No comments :
அவன என் கண்முன்னாடியே வரவேண்டாம்னு சொல்லு சரியான சனியன் பிடித்தவன்" கர்ஜித்துக்கொண்டிருந்தான் சதாசிவம்.
சதாசிவம் அண்மையில் MD பொறுப்பை ஏற்றவன்.
அப்பா விட்டு சென்ற அத்துணை நிறுவனத்திற்கும் ஒரே அதிபதி.
சதாசிவம் கவனிக்கும் நிறுவனத்தில் கடைநிலை ஊழியன் மணி.
மணி 50 வயதை நெருங்கும் ஒரு தொழிலாளி சதாசிவத்தின் அப்பா காலம் தொட்டு பணிபுரிவதால் சீனியர் என்ற அந்தஸ்தை தவிர வேறொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அங்கிகாரம் இல்லை அவனுக்கு.
சலவை செய்யப்படாத துணியும்,
எண்ணெய் தேயத்தே பல நாட்களான தலைமுடியுமாய் காட்சியளிப்பான்.
மணியை பார்த்தாலே சதாசிவம் பொறிந்து தள்ளுவான் "இவன் முகத்துல முழிச்சிட்டு போனாலே போன காரியம் வெளங்காது.எங்கப்பா வெச்ச ஆள்னு பார்கிறேன் இல்லைன்னா தூக்கியிருப்பேன் வேலைய விட்டு".
"ஐயதானே சொல்றாரு பரவாயில்ல" மனதிற்குள் நினைத்துக்கொள்வான் மணி.பெரும்பாலும் சதாசிவத்தின் கண்களில் படாமலேயே ஒதுங்கி வேலைபார்ப்பான்.தற்செயலாக பார்த்துவிட்டால் வசைமொழிதான்.
சதாசிவத்திற்கு பிடிக்காததினால் மற்ற யாவரும் கூட அவனை வெறுத்தே பழக்கப்பட்டுவிட்டனர்.
வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது சதாசிவத்தின் வழக்கம்.அந்த தருணங்களில் சற்று நிம்மதியாய் இருப்பான் மணி.
அப்படித்தான் ஒருநாள் சதாசிவத்தின் வீட்டில் செல்போன் மணியோசை.இரவு எப்படியும் பணிரெண்டு மணியை தாண்டியிருக்கும்.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சதாசிவத்தின் மனைவி போனை எடுத்தாள். அடுத்த கணம் தலையில் இடி இறங்கியதை போல் உணர்ந்தாள்.
"எந்த இடம் சீக்கிரம் சொல்லுங்க" கண்களில் நீர் மல்க போனை வைத்தாள்.சதாசிவத்திற்கு ஆக்ஸிடென்ட் காரில் செல்லும் போது எதிரே வந்த லாரியால்.
"நாங்க உறுதியா சொல்ல முடியாது நிறைய ரத்தம் வீணானதால உயிர் பிழைப்பது கஷ்டம்தான்" டாக்டர் சதாசிவத்தின் மனைவியிடம் கூறினார்.
"ஒண்ணு வேணா ட்ரை பண்ணலாம் ஆனா அதுவும் கொஞ்ச கஷ்டம்தான்,ஏன்னா அவர் குருப் ரத்தம் கிடைப்பது ரொம்ப அரிது, நீங்க வேணும்னா ட்ரை பண்ணிபாருங்க யாராவது அவர் குருப் ரத்தம் உள்ள ஆள் இருந்தா ரத்த தானம் பண்ண சொல்லுங்க,
பிழைக்க வழியிருக்கான்னு பார்ப்போம்" டாக்டர் உறுதியாய் கூறி முடித்தார்.
எங்கெங்கோ அலைந்துதிரிந்தும் அந்த வகை ரத்தம் உள்ள ஆள் யாரும் கிடைக்கவில்லை. எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார்.ஆனால் யாரும் முன்வரவில்லை.
"சீக்கிரம் வந்திங்கன்னா பார்க்கலாம்"
டாக்டர் செல்போனில் பேசியவுடன் இன்னும் கலங்கிப்போனாள் சதாசிவத்தின் மனைவி.
"மாமா கண்ண முழிச்சிட்டார்" சதாசிவத்தின் மைத்துனனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. எல்லோருக்கும் ஒரே வியப்பு எப்படி நடந்தது?
சதாசிவத்தின் கண்களில் கண்ணீர் "எனக்கு உயிர் கொடுத்த அந்த உத்தமனை நான் பார்க்க வேண்டும் கூட்டி வாருங்கள் சீக்கிரம்"
மணி என்ற அந்த மாமனிதன்தான் சதாசிவத்திற்கு ரத்தம் வழங்கியவன்.
கடைநிலை ஊழியனானாலும் பொருந்தித்தான் போனது அவன் ரத்தமும் ஒரு பணக்காரனின் ரத்தத்தோடு.

கோபம்

No comments :
ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”
ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”
சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”
பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”
சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”
பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”
பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.
பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

வாழ்க்கை

No comments :
ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி 🚖டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே 🚞 ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.
இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி 😱 திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு  டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.
அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.
ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.
இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.
👍 வாழ்க்கை என்பது
10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொறுத்தது.
90% நாம் எப்படி
எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. 😀

என்று தணியும் இந்த தாகம்

No comments :
என்று தணியும் இந்த தாகம்..!
அது ஒரு அரசாங்க மருத்துவமனை.
அன்று கிளைக் கட்டிடத் திறப்பு விழா நடந்துக்கொண்டிருந்தது.
மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்கள்,ஆளுங்கட்சி பிரமுகர்,
சினிமா நடிகர் என மேடையே களை கட்டிருந்தது.மருத்துவமனையின் பணியாளர்கள் அத்தனை பேரும் பார்வையாளர்களாய் அங்கு அமர்ந்திருந்தனர்.
மேடையில் இருந்த அரசியல்வாதியாக இருக்கட்டும்,நடிகராகட்டும் அத்தனை பேரும் அங்குள்ள மருத்துவர், நர்ஸ் என அனைவரையும் பாராட்டிய வண்ணம் இருந்தனர்..
"ஐயோ தவிக்குதே ஒரு பொட்டு தண்ணி பக்கத்துல காணாமே.".
இது எலும்பு முறிவு வார்டில் இருந்த நோயாளியின் சத்தம் .
"ஏன்யா கத்துற இங்க ஒருத்தரும் இல்ல எல்லாரும் மீட்டிங் பாக்க போயிருக்காங்க"
என்று பக்கத்துக்கு பெட்டில் இருந்த நோயாளி கூறினான் ..
அந்த வார்டில் இருந்த எல்லோருமே கை கால் முறிந்து நடமுடியாதவர்களாய் இருந்தனர்.
"அம்மா நர்சம்மா"
என்று கத்திக் கொண்டே ஒருக்களித்து திரும்பினான் . அப்படி புரண்டு படுத்துக் கொடுத்தது அவனுக்கு வேதனையாக இருந்தது போலும் வலியில் முகம் சுளித்தான்.
"என்னையா கூச்சல் போடறீங்க? நர்சம்மா திட்டுவாங்க" என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்தான் வார்ட் பாய் ..
இதற்கிடையில் அந்த அரசியல்வாதி பேசுவது ஒலிப்பெருக்கி வழியாக கேட்டது.
"இந்த மருத்துவமனை நம் நாட்டுக்கு குறிப்பாக இந்த ஊருக்கு மகத்தான சேவை செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை "
எனக் கூற பார்வையாளராய் இருந்த நர்ஸ் , வார்டு பாய் மருத்துவர்கள் என அனைவரும் கரகோஷம் எழுப்பினர். .
"தாகம் " அரற்றினான். அந்த தாப ஜுரக்காரன்.
"யோவ் கொஞ்சம் பொறுயா அவங்க வரவேணா மீட்டிங் எப்போ முடியுமோ."
"எப்படிங்க பொருக்குறது என்னால முடியலையே." என அவன் நெளிந்தான்.
இதைக் கண்ட மூன்றாவது பெட் காரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. சட்டென்று எழுந்து இருக்கும் ஒத்தக்காலை வைத்து நொண்டி அடித்துச் சென்று எப்படியோ தத்தி தாவி தண்ணீர் பானைக்கு அருகே சென்றது தான் தாமதம்.
தடுமாறி பானை உடைய சத்தம் கேட்டு ஓடி வந்த வார்டு பாய் இதைப் பார்த்து விட்டு நர்சிடம் சொல்ல வேண்டா வெறுப்பாய் எழுந்து வந்தவர் "யோவ் என்னய்யா பண்ற சுத்த நான்சென்ஸா இருக்க கொஞ்ச நேரம் மீட்டிங் பார்க்க விடறீங்களா போய்யா எடத்துக்கு பெரிய டாக்டர் வரட்டும் உங்க எல்லாரையும் கம்ப்ளைன்ட் பண்றேன்" .
என கத்திவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமலே மீட்டிங் காணும் ஆவலில் ஓடினாள்.
வார்டு முழுக்க மௌனம் .
ஒலிபெருக்கியில் சத்தம் அதிகமாய் கேட்டது.
"இந்த மருத்துவமனியில் நோயாளியாக வந்து இப்பேற்பட்ட நர்ஸ்களின் சேவையை பெற எனக்கும் கூட ஆசையாக இருக்கிறது ."
என அந்த நடிகர் சொல்ல கரகோஷம் அந்த கட்டிடத்தையே கிடுகிடுக்க செய்தது.

Late

No comments :
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்.
அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்”
என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது. பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்..சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.
அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோஅவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே
உன் வாழ்வை மாற்ற முடியும்.

பாஸிட்டிவ் திங்கிங்(Positive Thinking)

No comments :
உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பாஸிட்டிவ் திங்கிங் விஷயம்
இதை படித்த பின்பு ஒரு ஒரு நிமிடம் கொஞ்சம் யோசியுங்கள் உங்களுக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளதா என்று அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசியுங்கள்...
விளக்கம் இறுதியில் உங்களுக்கே புரியும்.
ஒரு மேலைநாட்டு பிரசித்தி பெற்ற கவிஞனின் வீடு முற்றிலுமாக தீயில் எரிந்து விட்டது.
வீட்டினுள் இருந்த விலையுயர்ந்த ஆடை அலங்கார பொருட்கள் அந்த கவிஞன் தன்னுடைய கவிதையால் 25 வருடங்களாக சிறிது சிறிதாக சம்பாதித்த பணம் நகைகள் எல்லாமும் சேர்த்து ஒரே நேரத்தில் தீயில் கருகிவிட்டது
இந்த செய்தியை அந்த கவிஞனிடம் சொல்லப்பட்டது,,
உடனே தனது வீட்டிற்கு வந்தான்
கூட்டத்தை விலகி கொண்டு உள்ளே நுழைந்தான்,
பாதி எரிந்த நிலையிலுள்ள ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்தான்.
தனது காலை நீட்டி கையை தலைக்கு பின்புறம் வைத்து மேற்கூரையின்றி அப்பட்டமாக தெரியும் வானத்தை பார்த்துகொண்டே இருந்தான்.
குழுமியிருந்த மக்கள் கவிஞனது இழப்புக்காக கவலைதோர முகத்துடன் அவனை பார்து கொண்டு இருந்தனர்.
இப்போது கவிஞன் மேற்கூரையின்றி இருந்த தனது வீட்டின் மேலுள்ள வானத்தை பார்த்துகொண்டே லேசாக புன்னகைக்க செய்து கொண்டே சொன்னான்.
இனி நிலாவிற்காக கவிதை எழுதும்போது முழு நிலவையும் ரசித்து பார்த்துகொண்டே கவிதை எழுதலாம்...

ADD