Tuesday, June 21, 2016

ரத்தம்

No comments :
அவன என் கண்முன்னாடியே வரவேண்டாம்னு சொல்லு சரியான சனியன் பிடித்தவன்" கர்ஜித்துக்கொண்டிருந்தான் சதாசிவம்.
சதாசிவம் அண்மையில் MD பொறுப்பை ஏற்றவன்.
அப்பா விட்டு சென்ற அத்துணை நிறுவனத்திற்கும் ஒரே அதிபதி.
சதாசிவம் கவனிக்கும் நிறுவனத்தில் கடைநிலை ஊழியன் மணி.
மணி 50 வயதை நெருங்கும் ஒரு தொழிலாளி சதாசிவத்தின் அப்பா காலம் தொட்டு பணிபுரிவதால் சீனியர் என்ற அந்தஸ்தை தவிர வேறொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அங்கிகாரம் இல்லை அவனுக்கு.
சலவை செய்யப்படாத துணியும்,
எண்ணெய் தேயத்தே பல நாட்களான தலைமுடியுமாய் காட்சியளிப்பான்.
மணியை பார்த்தாலே சதாசிவம் பொறிந்து தள்ளுவான் "இவன் முகத்துல முழிச்சிட்டு போனாலே போன காரியம் வெளங்காது.எங்கப்பா வெச்ச ஆள்னு பார்கிறேன் இல்லைன்னா தூக்கியிருப்பேன் வேலைய விட்டு".
"ஐயதானே சொல்றாரு பரவாயில்ல" மனதிற்குள் நினைத்துக்கொள்வான் மணி.பெரும்பாலும் சதாசிவத்தின் கண்களில் படாமலேயே ஒதுங்கி வேலைபார்ப்பான்.தற்செயலாக பார்த்துவிட்டால் வசைமொழிதான்.
சதாசிவத்திற்கு பிடிக்காததினால் மற்ற யாவரும் கூட அவனை வெறுத்தே பழக்கப்பட்டுவிட்டனர்.
வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது சதாசிவத்தின் வழக்கம்.அந்த தருணங்களில் சற்று நிம்மதியாய் இருப்பான் மணி.
அப்படித்தான் ஒருநாள் சதாசிவத்தின் வீட்டில் செல்போன் மணியோசை.இரவு எப்படியும் பணிரெண்டு மணியை தாண்டியிருக்கும்.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சதாசிவத்தின் மனைவி போனை எடுத்தாள். அடுத்த கணம் தலையில் இடி இறங்கியதை போல் உணர்ந்தாள்.
"எந்த இடம் சீக்கிரம் சொல்லுங்க" கண்களில் நீர் மல்க போனை வைத்தாள்.சதாசிவத்திற்கு ஆக்ஸிடென்ட் காரில் செல்லும் போது எதிரே வந்த லாரியால்.
"நாங்க உறுதியா சொல்ல முடியாது நிறைய ரத்தம் வீணானதால உயிர் பிழைப்பது கஷ்டம்தான்" டாக்டர் சதாசிவத்தின் மனைவியிடம் கூறினார்.
"ஒண்ணு வேணா ட்ரை பண்ணலாம் ஆனா அதுவும் கொஞ்ச கஷ்டம்தான்,ஏன்னா அவர் குருப் ரத்தம் கிடைப்பது ரொம்ப அரிது, நீங்க வேணும்னா ட்ரை பண்ணிபாருங்க யாராவது அவர் குருப் ரத்தம் உள்ள ஆள் இருந்தா ரத்த தானம் பண்ண சொல்லுங்க,
பிழைக்க வழியிருக்கான்னு பார்ப்போம்" டாக்டர் உறுதியாய் கூறி முடித்தார்.
எங்கெங்கோ அலைந்துதிரிந்தும் அந்த வகை ரத்தம் உள்ள ஆள் யாரும் கிடைக்கவில்லை. எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார்.ஆனால் யாரும் முன்வரவில்லை.
"சீக்கிரம் வந்திங்கன்னா பார்க்கலாம்"
டாக்டர் செல்போனில் பேசியவுடன் இன்னும் கலங்கிப்போனாள் சதாசிவத்தின் மனைவி.
"மாமா கண்ண முழிச்சிட்டார்" சதாசிவத்தின் மைத்துனனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. எல்லோருக்கும் ஒரே வியப்பு எப்படி நடந்தது?
சதாசிவத்தின் கண்களில் கண்ணீர் "எனக்கு உயிர் கொடுத்த அந்த உத்தமனை நான் பார்க்க வேண்டும் கூட்டி வாருங்கள் சீக்கிரம்"
மணி என்ற அந்த மாமனிதன்தான் சதாசிவத்திற்கு ரத்தம் வழங்கியவன்.
கடைநிலை ஊழியனானாலும் பொருந்தித்தான் போனது அவன் ரத்தமும் ஒரு பணக்காரனின் ரத்தத்தோடு.

No comments :

Post a Comment

ADD