Thursday, May 5, 2016

அதிமுக தேர்தல் அறிக்கை

No comments :
பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை சற்று முன் வெளியிட்டார் முதல்வர் ஜெ.
முதல் பிரதியை டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி. பெற்றுக் கொண்டார்.
  • விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி
  • 2016-2021 காலத்தில் 40,000 கோடி ரூபாய் பயிர்கடன்
  • விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
  • காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்
  • முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை  152 அடியாக உயர்த்த நடவடிக்கை
  • சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தமிழகத்தில் அனுமதிக்க முடியாது
  • பத்திரப் பதிவு எளிமையாக்கப்படும்.
  • மீனவர்கள் நிவாரணத் தொகை ரூ. 5,000 ஆக ஆக்கப்படும்.
  • மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்
  • மீனவர்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
  • உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்
  • மின்பதன பூங்காக்கள் அமைக்க தொடரந்து நடவடிக்கை எடுக்கப்படும்
  • புதிய சாலைகள் அமைக்கப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
  • மகப்பேறு உதவித்தொகை ரூ. 18,000
  • மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் இலவச இணைய இணைப்பு
  • பள்ளிக்கல்வி மேம்படுத்தப்படும்
  • 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை
  • பொங்கல் திருநாளில் கோ-ஆப்டெக்ஸில் துணிமணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன்
  • வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு
  • மகளிருக்கு ஸ்கூட்டருக்கு 50 % மானியம்
  • ஏழை, எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்காக அம்மா பேங்கிங் கார்டு

No comments :

Post a Comment

ADD